Facebook Post
ஒளி படர்ந்த ஒரு தேசம் நோக்கி
வண்டுகளாலும், வண்ணத்துப்பூச்சிகளாலும்
கவர்ந்துசெல்லப்படுகிறேன்.
அங்கு பலபேர் பூமியிலிருந்து புதிதாக முளைத்துக் கொண்டிருந்தார்கள்...
சிலர் வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்...
அவர்களைப் பார்ப்பதற்கு ஆவலுற்ற நான்
அவர்கள் ஒன்றுகூடும் இடத்தை நோக்கித் தவழ்ந்தே செல்கிறேன்...
தவழ்ந்து செல்லக் காரணமும் இரண்டுண்டு...
ஒன்று -
அங்கு தவழ்ந்து மட்டுமே செல்லமுடியுமாக இருந்தது...
மற்றொன்று -
நான் இன்னும் நடக்கக் கற்றுக்கொள்ளவில்லை...
அவர்களை அண்மிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை,
இப்பொழுதே அவர்களை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
அவர்கள் அனைவரினது கைகளிலும் மயில் தோகை
ஒவ்வொன்று கொடுக்கப்பட்டிருந்தது...
என்னவொரு ஆச்சர்யம்,
என்னையொத்த தோற்றமுடை
ஒருவனும் அங்கே அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தான்...
அனைவரும் குதூகலமாக,
ஆரவாரத்துடன் ஆனந்தமாக இருக்கும் இத்தருணத்தில்
ஆரவாரத்துடன் ஆனந்தமாக இருக்கும் இத்தருணத்தில்
என்னையொத்த தோற்றமுடைய அவன் மட்டும் -
தலை கவிழ்ந்தவனாக அமைதியிழந்து,
அமைதியாகி அமர்ந்திருக்க
காரணம் என்னவோ?...
காரணமறிய
உங்களைவிடவும் ஆவலாகவே
நான் அவனை நெருங்கிச் செல்கிறேன்,
ஏனெனில் அவன்தான் என்னையொத்த -
உருவமுடையவன் ஆயிற்றே...
அவனின் கவலை மிகுதிக்கான
காரணத்தை அறிந்தால்
கண்டிப்பாக உங்களுக்கும் சொல்வேன்.
அவன் பெயரேனும் அறியக் கிடைக்காமல் போயிற்று...
அதற்கிடையில் பொழுதும் புலர்ந்திற்று...
உண்டான கனவும் கலைந்திற்று...
கனவின் மிகுதி
நாளையும் என்னோடு கலக்கவேண்டும்...
கலந்தால் மட்டுமே
கதையின் மிகுதியும் தொடரும்...
-நன்றி-
-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
19-Jun-2016
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
19-Jun-2016