Wednesday, June 13, 2018

தூரநோக்குடைய புரிதல்

Facebook Post


திட்டமிட்டோ அல்லது தேவையுணர்ந்தோ
இருவேறு திசைகளில் உண்டான -
இரு நதிகளும், சில காலம் கடந்து
இணைந்து பயணிக்க சந்தர்ப்பம் கிடைத்தும் -
சேராமலே பிரிந்து செல்கின்றன...

இரண்டுமிணைந்தால்
ஒருவேளை - வெள்ள அதிகரிப்பால்,
புரிதல்கள் இல்லாமல் கட்டப்பட்ட -
அந்தக் குடிசைவீடு மூழ்கிவிடக்கூடும்
என்ற ஒற்றைக் காரணத்திற்காய்...

இங்கு தூரநோக்குடைய புரிதல்கள் மிகைத்து கிடக்கின்றன...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



No comments: