அன்றைய தினம் அவ்வாறுதான் நடக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை.
அவன் மட்டுமல்ல, ஆண்டவன் ஒருவனைத்தவிர வேறு யாருமே அதனை அறிந்திருக்கவில்லை.
அன்று அவ்வாறு நடந்ததனால்தான் மற்றைய அன்றில் வேறு ஒன்று நடந்தாயிற்று. மற்றைய அன்றில் வேறு ஒன்று நடந்ததன் விளைவால்தான் இன்று அவன் நிலை இவ்வாறு ஆகிவிட்டது என அவனைத் தவிர மற்றைய அனைவரும் தெளிவாக அறிந்திருந்தார்கள். அவனைப்பற்றி அனைத்துமே அனைவரும் அறிந்திருக்க அவனைப் பற்றி அவன் மட்டும் அவன் நிலை உணராததுஏன் என்ற கேள்வி உண்டல்லவா... விடை ஒன்றே ஒன்றுதான், சுயம் தொலைத்து இன்று சுயநினைவில்லாது பித்துப் பிடித்த பிணமாய் அலைவதுதான். அனைத்தையும் அவன் மறந்திருந்தாலும் அன்றையதினத்தின் விளைவால் மற்றைய தினம் நடந்த அந்த விடயத்தை மட்டும் அவன் மறந்து விடவில்லை. அதனை நிரூபிப்பதனைப் போன்றே அவன் பார்ப்போரிடமெல்லாம் அந்த சம்பவத்தைப் பற்றியே பிதற்றுவான்.
No comments:
Post a Comment