Monday, June 4, 2018

என்னைத் தொலைத்து விட்டேன்.

Facebook Post

தொலைந்து போன என்னை,
நான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
யாரேனும் காண்பின் -
என்னிடம் தகவல் தாருங்கள்.
யாரேனும் கண்டெடுப்பின் -
தயவு செய்து தந்து விடுங்கள்.
யாரேனும் தேடுவதற்கு முயற்சிப்பின் -
கொஞ்சம் கவனமாக தேடுங்கள்,
தேவையில்லை என்று வீசியெறிந்த -
குப்பையில் கூட கிடைக்கலாம்.
தொலைந்து போன என்னுள் தான் சில-
எண்ணங்களை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.
அது எனக்கு இப்பொழுது தேவைப் படுகின்றது...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


No comments: