Sunday, June 3, 2018

#பழியான_பல_வித்தியாக்களுக்கு_சமர்ப்பணம்#

பெண்ணியம் போற்றும் மண்ணிலே
பேதையவள் பள்ளிசென்று வரையிலே
குலம் மறந்த கொடூரரும்
காமம் மிகைத்த வெறியரும்
கருணை கரைத்த ஈனரும்
வழிமறித்து முடக்கி
கைபிடித்து இழுத்து
காமவேட்கை தணித்து
காசாய் மாற்ற காணொளியெடுத்து
மங்கையவள் மானம் களைத்து
பேதையவள் உயிரை பிரித்தனர்.
புயலில் சிக்கிய பூவாய் சிதைத்தனர்.
-நன்றி-

-வரிகள்-

 முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
27-Jan-2018 


No comments: