Wednesday, June 13, 2018

அனுதினமும் எதிர்பார்க்கிறேன்...

Facebook Post





என்றேனும் நடந்திடுமா?...
நீண்ட நெடுந்தூரம், தனியாக -
நடந்து செல்ல யாசிக்கின்றேன்...
தனிமைக்கு துணையாக என்னருகில்
நீயும் இருக்கவேண்டும் என்பதும்
என் யாசகத்தில் ஒரு பாதி...
நெடுஞ்சாலைப் பயணத்தில்
மழைமேகம் பின்தொடர்ந்து
வெக்கையுணரா வண்ணம்
நிழல் தந்து காக்க வேண்டும்...
பின்தொடரும் மழைமேகம்,
அப்பப்போ தூரல் மழை -
பொழிய வேண்டும்...
புல் படர்ந்த பாதையிலே
பொடிநடையாய்ப் போகையிலே
சாலையோர மலர்களெல்லாம்
நறுமணத்தோடு வாழ்த வேண்டும்.
காற்றிலே தவழ்ந்து வரும்
குருவிகளின் மெல்லிசையும்,
காற்றிலே மிதந்து வரும்
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களும்,
கண்காட்சி போல் நிகழ வேண்டும்...
காதுகளும் சுவை அறிய வேண்டும்...
இடைவிடாது நான் பேச,
இடையிடையே நீ பேச,
பேச்சின் ஸ்வரம் எம்மிடையே
இன்னிசையாய் ஒலிக்க வேண்டும்.
உனக்கானவன் நானில்லை
நினைக்கையில் எனக்கானவள் நீயன்றோ...
நிறைவேறா ஆசைதான்
இருப்பினும் நினைப்பதில் தவறில்லை.
இன்றுதான் நடந்தாலும்
இனியொரு ஜென்மம் எடுத்தாலும்
நடக்காமல் போனாலும்
தினம் தோறும் நினைனவேனே...
நான் உன்னை மறவேனே...


-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
2-June-2018


No comments: