Wednesday, June 13, 2018

இனி அந்தக் குயில் அதன் குறிக்கோளை அடைந்துவிடும்.

Facebook Post


அடர்ந்த காட்டிலே
ஒற்றையடிப் பாதை பிடித்து
ஒற்றையாக நடந்து செல்லுகையில் 
நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பினால்
அருகேயிருந்த ஆலமர நிழலில்
அமர்ந்து விட்டேன்
சற்றே இளைப்பாறலாமென...
அமர்ந்திருந்த பொழுது
சிறுதூக்கம் என்னைக்-
கவ்விக்கொள்ள முயற்சிக்கையில்,
நான் கனவிலும் மறக்க-
நினைக்கும் சில எண்ணங்கள்
என்னுள் தன்னைத்தானே
மீட்டல் செய்ய ஆரம்பித்தன...
அதிகமான எண்ணங்கள்
தங்களைத் தாங்களே மீட்டல்
செய்யத் தொடங்கியதனால்,
என்னுள் நிசப்தம் அநியாயமாக
கொல்லப்பட்டு விட்டது.
சப்தங்கள் அதிகமானதால்
தூக்கம் கலைக்கப் பட்டது...
தூக்கம் கலைக்கப் பட்டதனால்
தூக்கம் என்னை விட்டுப் பிரிந்து சென்றது...
தன்னைத்தானே மீட்டல் செய்து கொண்டிருந்த
எண்ணங்களை ஒவ்வொன்றாக நான்
மீட்டல் செய்யத் தொடங்கினேன்...
மீட்டல்களின் போது எனக்குள் நானே
சில வார்த்தைகளைக் கூறி
என்னை நானே நகைத்துக் கொண்டேன்.
ஆனால் எனக்குள் நானே பேசுவதாக நினைத்து
அவ்வளவு சப்தமாக பேசியிருக்கிறேன்
என்பதை அந்தக் குயில் என்னருகே வந்து
ஆறுதலுக்காய் தாலாட்டுப் பாடும் வரை
நான் அறிந்திருக்கவில்லை.
(இனி அந்தக் குயில் என்னிடம் வந்தது பற்றி)
அவ்வழியே பறந்து சென்ற குயிலொன்று
என்புலம்பலைக் கேட்டு அவ்விடமே
தரித்து நின்று அனைத்தையும் செவிமடுத்திருக்கின்றது.
புலம்பலை மட்டும் கேட்காத குயில்
என்கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த
கண்ணீரினையும் கண்காணித்துள்ளது...
என்நிலை அறிந்த அக்குயில்
சோகம் மறந்து, என் எண்ணங்களின்
மீட்டல்கள் மறந்து
ஆழ்ந்த உறக்கம் என்னை
ஆட்கொள்ளும் வண்ணம்
வறண்டுகிடந்த என் காதுகள்
குளிரும் வண்ணம்
இனிமையோசை எழுப்பியது.
அதன் தாலாட்டுப் பிடித்துப் போன
என் காதுகளும் உள்ளமும்
அந்தக் குயில் உனக்கான உரிமம்
என்ற பாணியில் என்னை
வட்புறுத்த,
என்னிலையும் மறந்து,
அக்குயிலினை என்வசமாக்கி
வாழும் காலமெல்லாம்
வழிநெடுகிலும் குயிலினை
துணையாக்க எண்ணம் கொள்கிறேன்,
இதனால் உண்டாகப் போகும்
விளைவுகளையும் விபரீதங்களையும்
அறிந்திருந்த போதிலும்.
காலம் சில கழிய,
இது ஞாயம்தானா என்ற கேள்வி
என்னுள்ளே தன்னிச்சையாகவே எழுகிறது.
என்னை ஆறுதல் படுத்த வந்த குயிலை,
அத்துமீறி பிடித்து வந்து
கூண்டில் வைக்க முயற்சிப்பது
எவ்விதத்திலும் ஞாயமில்லை.
உண்மையில் அந்தக் குயில் செல்லவிருப்பது
வேறு பாதை நோக்கி.
அதனை அதன் இஷ்டப் பிரகாரம்-
போக விடுவதே சிறப்பு என்பது
மேலே கூறிய அதே அளவான-
சில காலம் கடந்த பின்பே உணர்ந்தேன்.
எனவே விரும்பியதை
விருப்பமில்லாமல்
விட்டுவிட்டேன்...
இனி அந்தக் குயில்
அதன் குறிக்கோளை
அடைந்துவிடும்...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
கிண்ணியா
(04-Jun-2018)


No comments: