சகோதரனே சற்று நில்லும்...
நான் ஒரு கதை சொல்கிறேன் கேளும்...
நான் ஒரு கவிஞனைக் கண்டேன்...
காலா காலம் அவன் ஒரு சிறந்த படைப்பாளியே!
எனதூரினிலேயே அவனது படைப்புலகம்...
ஆனால் அவன் படைப்புக்களோ ஒரு தனியுலகம்.
நான் அவற்றினுள் புகுந்திட,
அவற்றைப் புசித்திட,
காலம் சற்றே என்னைத் தள்ளி வைத்தது...
சமீபத்திலேயே அவனை என்னால் காணக் கிடைத்தது
இந்த_Facebook மூலமாக...
அவற்றைப் புசித்திட,
காலம் சற்றே என்னைத் தள்ளி வைத்தது...
சமீபத்திலேயே அவனை என்னால் காணக் கிடைத்தது
இந்த_Facebook மூலமாக...
அவன்,
இரவோடு பேசி மௌனமாய் உலா வருகின்றான்.
இரவோடு பேசி மௌனமாய் உலா வருகின்றான்.
வண்ணத்துப் பூச்சியின் செட்டை பிடித்து உலகையே சுற்றி அலைகிறான்.
மேகத்தைப் பிடித்து மழை நீரில் குழைத்து குதிரையொன்று செய்கிறான்.
அதன் மேலேறி அவனே சவாரியும் செய்கிறான்.
பொம்மைகளின் தன்மையை அறிய அவனே பொம்மையாகின்றான்.
பறவைகளின் இறக்கையிலே ஒரு மாளிகை அமைக்கின்றான்.
தன் புதுக் கவிக்கு தன் மகளையே கருவாய் சுமக்கின்றான்.
கற்பனைக் கடலினிலே கஞ்சாவும் ருசிக்கின்றான்.
இவனை எங்ஙனம் நானழைக்க...
இவனது இரவினுடனான உறவிற்காய் இராத்திரிக் கவிஞனா?
இல்லை வண்ணத்துப் பூச்சிகளைப் பாடியதனால் வண்ணக் கவிஞனா?
குதிரையைப் பாடியதால் வேகக் கவிஞனா?
மேகங்களைப் பாடியதனால் மென்மைக் கவிஞனா?
குழந்தைகளைப் பாடுவதனால் குழந்தைக்கு கவிஞனா?
கஞ்சாவைப் பாடியதனால் போதைக் கவிஞனா?
இல்லை பொம்மைகளைப் பாடியதனால் நீ பொம்மைக் கவிஞனா?
உனக்கென ஒரு பெயர் சூட்ட வேண்டும்,
அதனை வரும் வரலாறு போற்ற வேண்டும்.
அதனை வரும் வரலாறு போற்ற வேண்டும்.
அனைத்திற்கும் முதல் நான் உன்னை மனதார பாராட்ட வேண்டும்...
கொஞ்சமிரு...
வெறுமனே உன்னைப் பாராட்டிட முடியா...
வெறுமனே உன்னைப் பாராட்டிட முடியா...
அந்தக் கற்பனையுலகின் வழியைச் சொல்லு...
பறவையிறக்கையிலான உன் மாளிகையின் திறவு கோலைத் தருவாயா?
பறவையிறக்கையிலான உன் மாளிகையின் திறவு கோலைத் தருவாயா?
உன் படைப்பிலிருந்து சிதறிய சில வார்த்தைகள் அங்கு கிடக்கலாம்...
அது திண்ணம்.
அவை தேடிச்செல்லும் எனக்குக் கிடைக்கலாம்.
நான் அவற்றை ஒன்று சேர்த்து மாலையாக்கி உனக்கணிவித்து
உனை வாழ்த்த விழைகின்றேன்.
அது திண்ணம்.
அவை தேடிச்செல்லும் எனக்குக் கிடைக்கலாம்.
நான் அவற்றை ஒன்று சேர்த்து மாலையாக்கி உனக்கணிவித்து
உனை வாழ்த்த விழைகின்றேன்.
"உன்னை நீயே பித்தனெனக்" கூறியதாய் ஒரு நினைவு...
பித்தனென்பதிலும் "கவிப்பித்தன்" எனக் கொண்டால் சற்று மெருகேறும் என்பது எனது கருத்து.
திரு. ஏ. நஸ்புள்ளாஹ். அவர்களே மேலே வந்த "அவன், நீ" என்ற வார்த்தைகளை மரியாதை குறைவாக பொருள் கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
வார்த்தைக் கோர்வைக்கு அதுவே உகந்தது என்பது எனதெண்ணம், தவறெனில் தாழ்மையுடன் மன்னித்து, வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
-நன்றி-
-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
12-Dec-2017
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
12-Dec-2017
No comments:
Post a Comment