Monday, June 4, 2018

நிச்சயமில்லாதா பொழுதுகள்...

Facebook Post

என்றும் போலவே நாளையும் 
தனது பொழுது விடியும் என எண்ணியபடியே 
கனவு காண்கிறான் அவன்
கண்டுகொண்டிருக்கும் கனவில் கூட 
அவன் எண்ணவில்லை புலரும் பொழுது 
அவனைக் கவ்விக் கொள்ளப்போவதை.

நாளையின் மறைவில் உள்ள மர்மத்தை -
அறியாதவன் விடிந்தவுடன் வரவிருக்கும் -
நாளைக்காக, ஏற்கனவே திட்டமொன்று -
தீட்டி வைத்திருந்தான்
அதனையே கனவாக கண்டுகொண்டிருந்தான்.

தன் காதலியாக எண்ணம் முழுவதும் -
பெயர் குறிப்பிட விரும்பாத ஏற்கெனவே-
 பரீட்சயமான அவளை வர்ணமாக வரைந்து வைத்திருந்தான். 
இத்தனை காலமும் தனக்குள் வைத்திருந்த 
ஒருதலை ராகத்தினை அவளிடமும் பகிர்ந்திட-
முடிவெடுத்தவன் அவளுக்கு விருப்பமென -
அவன் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த -
அந்த குறிப்பிட்ட பரிசுப்பொருளை 
அழகாக வடிவமைக்கப் பட்ட அட்டைப்பெட்டியினுள் 
மறைத்து வைத்துவிட்டான்.

நாளை எப்படியாவது அவளது 
21வது பிறந்தநாள் விழாவில் 
அந்த பரிசுப்பொருளினை கொடுத்துவிட வேண்டும் 
அத்துடன் தன்காதலையும் பகிர்ந்திட வேண்டும் 
என நினைத்துக்கொண்டே நாளைய விடியலை 
எதிர்பார்த்த படியே உறங்கிவிட்டான்.

அவனுக்கென அந்த விடியல் விடியாததனால் 
ஆழ்ந்து உறங்கிப் போனான், 
மீண்டும் மீளமுடியாத தூரத்தை நோக்கிப் பயணமானான்.....

அவனுக்குத் தெரியாத ஒரு உண்மையும் -
சேர்ந்தே அவனுடன் மரித்துப்போகும் 
என்பதனையும் அவன் அறிந்திராதவனாகவே அவன் மரணித்திருந்தான்.

ஆம், 
இன்றைய தனது பிறந்தநாள் விழாவில் 
அவன் எப்படியேனும் தன்னிடம் 
அவனது காதலைப் பகிர்ந்திடுவான், 
தனது ஆசையும் பூர்த்தியாகிவிடும் 
என்ற மிகுந்த களிப்போடு காத்திருந்தாள் 
யாரும் அறியாதவண்ணம் ஒருதலையாக 
மனதார மணாளனாக ஏற்றிருந்த 
அந்த 21வயது மங்கை. 
இந்த உண்மையை அவன்கூட அறிந்திருக்கவில்லை.

அவளது பிறந்த நாளுக்காக அவன் வாங்கிவைத்த 
பரிசுப் பொருளிலும் உயர்வான விலை -
மதிப்பில்லாத பரிசாக ஆவலுடன் இருந்த அவளிடம் 
வந்து சேர்ந்தது அவனது இரங்கல் செய்தி... 
கேள்வியுற்றவுடன் உடைந்து போனாள்...

தற்சமயம்,
அவனுக்கென விடியாத அந்த பொழுது அவளுக்கும் இருண்டு கொண்டிருந்தது, அவள் இறக்காத போதும்.

இவைகள் நிச்சயமில்லாத பொழுதுகள்.
-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
7-Apr-2018


No comments: