Monday, June 4, 2018

கனவிலே காதலை வென்றான்.

Facebook Post

மலரவிருக்கும் விடியலை சுவைக்க அவனுக்கு
அந்த இரவினைக் கடக்க வேண்டியிருந்தது.
அன்றைய இரவினைக் கடப்பது 
மிகுந்த சிரமமாக இருக்கக்கூடும் 
என்றே அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதே சமயம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த
அந்த இரவு அவனை எச்சரித்தது.
அவனை ஒரு கனவு கவ்விக் கொள்ளப்-
 போவதாக காரணமும் சொன்னது.

சொன்னது போலவே தூக்கம் அவனைக்
கவ்விக்கொண்ட வேளை,
அந்தக் கனவு அவனை ஆட்கொண்டது.
ஆட்கொண்ட கனவு வழமை போன்று
பயங்கரமானதாக இருக்குமோ 
என்ற அச்சத்துடனேயே -
அந்த கனவினை ஏற்றுக் கொள்கிறான்.

ஆனால் மலர்ந்ததோ,
நாளைய எந்த விடியலுக்காக
காத்துக் கொண்டிருந்தானோ!
நிச்சயமாக அதே விடியல்தான் அந்த கனவிலும்.
மிகுதியாக மகிழ்ந்தவனாக,
முழுமையாக அந்தக் கனவினை சுவைக்கத் தொடங்கினான். 
அந்த மிகுதியான மகிழ்விற்கு காரணமும் உண்டு…

கனவின் மூலம் விடிந்த, 
மலரவிருக்கும் அந்த விடியலில்தான்
முதன் முதலாக அவனது காதலை-
அவளிடம் ஒப்புவிக்கவிருந்தான்.
அதிசயமென்னவெனில்,
நிஜத்திலே அவனது அழைப்பினை ஏற்ற அவளும் 
அந்தக் கனவிலே வீற்றிருந்தாள்.
ஒத்திகைக்கு சரியான சந்தர்ப்பம் -
இதுவே என எண்ணியவன்,
இந்த கனவினை நாளைய நிகழ்வின் 
நகலாக பயன்படுத்தி
கிடைத்த சமயத்தில் 
காதல் காவியம்மொன்று நடத்தி முடித்தான். 

காதலிற்கான அவனது கோரிக்கை 
காதலி அவளால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அவளால் காதல் அங்கீகரிக்கப்பட்டாலும்,
விடியவிருக்கும் அந்த விடியலில்தான்
அதற்கான உண்மை அங்கீகாரம் விவரிக்கப்படும்...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
7-May-2018


No comments: