Wednesday, June 13, 2018

நான் பேனா.

Facebook Post


ஒரு பொழுதேனுமில்லை உனை - நினைக்காமல் நான்,
சிறு கணமேனுமில்லை உனை -
நெருங்காமல் நான்...
ஏக்கம் கொண்டு உனை எட்டிப் பார்க்கிறேன்.
வெருமை படர்ந்த வெண்மைக் -
காகிதாமாய் நீ -
எனக்குக் காட்சியளிக்கிறாய்.
உன் வெண்மைத் தேகத்தில் -
என்னில் வடிந்தோடும்,
வண்ணத்திரவியம் கொண்டு,
புதுக் காதல் கதை வரைய -
ஆசை கொள்கிறேன்...
ஆசை கொண்ட நான்,
ஆசுவாசமாய் அடங்கிக் கிடப்பது சரிதானா?...
உங்கள் கேள்வி நியாயமற்றதன்று...
அதற்கு காரணமும் உண்டு...
காதலை வரைய -
என்னிடம் வரிகள் இல்லாமலுமில்லை...
வர்ணங்கள் தீர்ந்து வழியில்லாமலும் நான் இல்லை...
நான் வரைந்துதான் காகிதத்திற்கு என் காதல் கதை தெரிய வேண்டுமென்ற தேவையுமில்லை...
பொதுவாக வெண்மையை நேசித்தேன் நான்,
ஆனால்...
காகிதம் வர்ணமையை நேசிக்குமா?...
என்ற பயமுண்டு என்னிடம்,
சில வேளை காகிதம் வர்ணமையை ஏற்றாலும்
அது என்னிடத்திலுல்ல வர்ணமையை ஏற்குமா?...
என்ற சிறிய சந்தேகமும் உண்டு.
இதில் காரணமாக இன்னுமொரு விடயமுமுண்டு...
அதனை இங்கு பகிர்தலில் எனக்கு உடன்பாடில்லை...
அது என் நிற-மையோடு மையாக வடிந்தே போகட்டும்.
இப்படிக்கு...
வெறுமை படர்ந்த வெண்மைக் காகிதத்தைக் காதல் செய்யும் காலாவதியான பேனா.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
24-May-2018



No comments: