Monday, June 4, 2018

புரிந்துகொள்ளும் திறன்

Facebook Post

"தெரிந்ததை தெரியாதவர்களுக்குக் 
கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வி."

ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான சிலர் 
அவர்கள் கற்றுத் தேராத 
அல்லது அவர்களால் தெரிந்து, அறிந்து கொள்ளப்படாத 
சில விடயங்களை அடுத்தவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கும் ஆசான் ஆகிவிடுகின்றனர்.

அத்தகைய ஆசான்களிடம் அவர்களால் 
கற்பிக்கப்படுகின்ற அவர்கள் அறிந்திராத 
குறித்த சில விடயங்களை 
அதே விடயத்தில் கற்றுத் தேர்ந்த ஒருவர்
 எடுத்துரைத்தாலும் அதனை அவர்கள் 
ஏற்றுக்கொள்ளும் படியாக 
கற்றுத் தேர்ந்தவரின் கருத்துக்களையோ,
விளக்கங்களையோ பார்ப்பதுமில்லை அனுகுவதுமில்லை.

காரணம் யாதாக இருக்க வேண்டுமென்றால் 
புரிதல்கள் குன்றிய அத்தகை 
அறிஞர்களிடம் புரிந்துகொள்ளும் திறன்களிலும் -
பார்க்க குதர்க்கமே நிறைந்து காணப்படுகின்றது எனலாம்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


No comments: