Wednesday, June 13, 2018

வெற்றுக் காகிதங்களாலான வெள்ளைப் புத்தகம்.

Facebook Post


யாருக்கேனும் வழி தெரிந்தால் என்னைக் காப்பாற்றுங்கள்...
வெற்றுக் காகிதங்களால் ஒரு புத்தகம் உருவாக்கப் பட்டிருந்தது.
அந்த புத்தகத்தை வெறுமனே படித்துவிட முடியாது.
சிலர் அதனை ஆர்வத்துடன் கையிலெடுத்தனர்...
படிக்க சிரமமாக உள்ளதென தூக்கி தூர போட்டனர்.
தூக்கியெறியப்பட்ட அந்த புத்தகம் -
என்னிடம் வந்து சேர பல காலங்களாகிவிட்டான.
என்னிடம் கிடைக்கப் பெரும் போது -
எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக தோன்றவில்லை.
படிக்க ஆராம்பித்த நான் அதனுள் புகுந்து கொண்டேன்.
புகுந்து கொண்ட நான் எனக்கென -
ஒரு இடத்தினையும் அமைத்துக்கொண்டேன் .
எனக்கென ஒரு இடம் அமைத்த நான்
சுவாரஸ்யமாக படித்துக் கொடுக்கிறேன் அந்த புத்தகத்தை.
இப்பொழுது எனக்குள் ஒரு சிந்தனை என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது,
ஆர்வமிகுதியால் உள் நுழைந்த நான் -
வந்த பாதையினை மறந்துவிட்டேன்.
இன்னும் சில காலம் கழிய நான் வெளியில் போகவேண்டி இருக்கும் .
ஏனெனில்,
அந்த புத்தகத்தை படித்து முடிக்க இன்னும் ஒரு சில பக்ககங்களே எஞ்சியுள்ளன.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
12-May-2018

No comments: