Monday, June 4, 2018

என்னவள் என்றுமே எனக்குக் குழந்தைதான்...



Facebook Post

காற்றே!
மெதுவாக வீசு...
என்னவள் -
உறங்கிக் கொண்டிருக்கின்றாள். 

சூரியனே!
சூடான உன் தேகத்தை
சாந்தம் கொள்ளச் செய்...
உன் சூட்டினால்
என்னவளின் தூக்கம் கலையாக் கூடும்...

பறவைகளே!
ஏன் இவ்வளவு சத்தம்?

பூக்களே!
நீங்கள் மலருவதற்கு
இன்னுமும் நேரமுண்டு...
என்னவள் உறங்கியெழுந்த-
பின்னர் நீங்கள் மலர்ந்தால் போதும்.
இரவானாலும் சரியே...

நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
23-Feb-2018



No comments: