Wednesday, June 13, 2018

நான் நிறங்களை நேசிக்கின்றேன்.

Facebook Post


கடுமையான இருளையும்,
யாதேனுமற்ற தனிமையையுமே -
நான் அதிகமாக நேசித்தேன்.
காயங்களுக்கான மருந்துகள் அங்குதான் -
கிடைக்குமென பெரும்பாலான 
எனது எண்ணங்கள் எனக்கு கற்பித்து தந்தன...
காலங்களின் பயணத்தில்,
நானடைந்து கிடந்த இருளின் கனதியில்,
என் வார்த்தைகளின் ஏக்கத்தில்,
ஆர்வமுற்ற ஒரு நிறக்கலவை -
ஆதரவாக என்னிடம் வந்தது...
நிறக்கலவை என்னை
புதிதான ஒரு நிற உலகிற்கு அழைத்துச்சென்று,
நிஜங்கள் சிலவற்றையும்,
நிறங்கள் பலவற்றையும் கற்றுத்தந்து.
இப்பொழுதெல்லாம் நிறங்களையே -
அதிகம் நேசிக்கின்றேன்...
இருள் நிறைந்த எனது கடந்த -
காலக் கனாக்கள் பல
நிறங்களாகவே மீண்டும் வந்து செல்கின்றன.
நிறக்கலவையே உனக்கே அனைத்து நன்றிகளும்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



No comments: